வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. ஐபிஎல் 2019
Written By
Last Modified: செவ்வாய், 30 ஏப்ரல் 2019 (19:36 IST)

ஐபிஎல் 2019: ராஜஸ்தான் இன்று வெற்றி பெற்றால்...?

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 49வது லீக் போட்டி இன்று ராஜஸ்தான் மற்றும் பெங்களூரு அணிகளுக்கு இடையே நடைபெறவுள்ளது. பெங்களூரு அணி அடுத்த சுற்றுக்கு செல்ல வாய்ப்பே இல்லை என்ற நிலையில் இன்று ராஜஸ்தான் வெற்றி பெற்றால் அந்த அணி அடுத்த சுற்றுக்கு செல்ல ஒரு சிறு வாய்ப்பு உள்ளது
 
இன்று ராஜஸ்தான் வெற்றி பெற்று, வரும் மே 4ஆம் தேதி டெல்லியுடன் நடைபெறும் போட்டியிலும் வெற்றி பெற்றால் 14 புள்ளிகளுடன் அந்த அணி 4வது இடம்பிடித்து அடுத்த சுற்றுக்கு செல்ல ஒரு வாய்ப்பு உள்ளது. ஆனால் அதற்கு ஐதராபாத் அணி இரண்டு போட்டிகளிலும்,  கொல்கத்தா, பஞ்சாப் ஆகிய அணிகள் ஒரு போட்டியிலும் தோல்வி அடைய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. இது நடக்குமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்
 
இந்த நிலையில் இன்றைய போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்துவீச முடிவு செய்துள்ளது. இதனையடுத்து பெங்களூரு அணி இன்னும் சில நிமிடங்களில் பேட்டிங் செய்யவுள்ளது. டாஸ் வென்ற ராஜஸ்தான் போட்டியையும் வெல்லுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்