டாஸ் வென்ற டெல்லி பேட்டிங்: பெங்களூரு தேறுமா?

Last Modified ஞாயிறு, 28 ஏப்ரல் 2019 (16:19 IST)
ஐபிஎல் கிரிக்கெட் போட்டி தொடரின் 46வது லீக் போட்டி இன்று டெல்லி மற்றும் பெங்களூரு அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது. இன்றைய போட்டியில் டெல்லி அணி கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்ய முடிவெடுத்தார்.
இதனையடுத்து சற்றுமுன் களமிறங்கிய டெல்லி அணி 4 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 41 ரன்கள் எடுத்து அதிரடியாக விளையாடி வருகிறது. தவான் மற்றும் பிபி ஷா களமிறங்கிய நிலையி பிபி ஷா 18 ரன்களில் அவுட் ஆனார்.

இன்றைய போட்டியில் டெல்லி அணியில் மோரீஸுக்கு பதில் லாமிச்சேன் களமிறங்கியுள்ளார். அதேபோல் பெங்களூரு அணியில் மோயின், செளதி மற்றும் அக்சயதீப் ஆகியோர்களுக்கு பதிலாக காலேசன், டூப் மற்றும் குர்கட்சிங் களமிறங்கியுள்ளனர்.
மேலும் இன்றைய போட்டியில் டெல்லி வெற்றி பெற்றால் ரன் ரேட் அடிப்படையில் சென்னையை பின்னுக்கு தள்ளி அந்த அணி முதலிடத்தை பிடித்துவிடும். அதேபோல் இன்று இரவு 8 மணிக்கு நடைபெறும் போட்டியில் மும்பை அணி கொல்கத்தாவை வீழ்த்திவிட்டால் சென்னை அணி மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுவிடும் என்பதும் குறிப்பிடத்தக்கதுஇதில் மேலும் படிக்கவும் :