புதன், 25 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. ஐபிஎல் 2019
Written By
Last Modified: திங்கள், 29 ஏப்ரல் 2019 (20:22 IST)

டாஸ் வென்ற பஞ்சாப் பந்துவீச முடிவு: ஐதராபாத் அதிரடி காட்டுமா?

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 48வது லீக் போட்டி இன்று பஞ்சாப் மற்றும் ஐதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது. இன்றைய போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கேப்டன் அஸ்வின், பந்துவீச்சை தேர்வு செய்ததால் ஐதராபாத் அணி பேட்டிங் செய்து வருகிறது
 
இன்றைய ஐதராபாத் அணியில் வார்னர், வில்லியம்சன், மணிஷ் பாண்டே, விஜய்சங்கர், முகமது நபி, சஹா, அபிஷேக் ஷர்மா, ரஷித் கான், புவனேஷ்வர் குமார், கலீல் அகமது, சந்தீப் சர்மா ஆகியோர் உள்ளனர்.
 
அதேபோல் ஐதராபாத் அணியில் கே.எல்.ராகுல், கிறிஸ் கெய்ல், மயாங்க் அகர்வால், டேவிட் மில்லர், பூரன், பிரப்சிம்ரன் சிங், அஸ்வின், முஜிப் ரஹ்மான், முகமது ஷமி, எம்.அஸ்வின் மற்றும் அர்ஷ்தீப்சிங் ஆகியோர் உள்ளனர். 
 
பஞ்சாப்,ஐதராபாத் ஆகிய இரண்டு அணிகளுமே புள்ளிப்பட்டியலில் 10 புள்ளிகளை பெற்றுள்ளதால் இன்று வெற்றி பெறும் அணிக்கு மட்டுமே பிளே ஆஃப் சுற்றுக்கு செல்ல வாய்ப்பு உள்ளது. தோல்வி அடையும் அணி கிட்டத்தட்ட வெளியேறியது போல்தான்
 
இந்த நிலையில் சற்றுமுன் வரை ஐதராபாத் அணி 5 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 66 ரன்கள் எடுத்துள்ளது