கடைசி வாய்ப்பை மிஸ் செய்த பெங்களூர்: பிளே ஆஃப் சுற்றுக்கு டெல்லி தகுதி!

Last Modified ஞாயிறு, 28 ஏப்ரல் 2019 (20:39 IST)
இன்று நடைபெற்ற 46வது ஐபிஎல் போட்டியின் லீக் ஆட்டத்தில் பெங்களூரு அணியை டெல்லி அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றது. மேலும் புள்ளிப்பட்டியலில் சென்னையை பின்னுக்கு தள்ளி டெல்லி முதலிடத்தையும் பெற்றது. கடந்த 2012ஆம் ஆண்டுக்கு பின் டெல்லி அணி தற்போதுதான் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது
இன்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 187 ரன்கள் எடுத்தது. கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 52 ரன்களும், தவான் 50 ரன்களும் எடுத்தனர்

188 என்ற இலக்கை நோக்கி விளையாடிய பெங்களூரு அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 171 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது. இந்த போட்டியில் தோல்வி அடைந்ததால் அடுத்த சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை பெங்களூரு இழந்தது. இன்றைய போட்டியின் ஆட்டநாயகனாக தவான் தேர்வு செய்யப்பட்டார்.

இந்த நிலையில் 47வது லீக் போட்டி மும்பை மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது. இதில் முதலில் பேட்டிங் செய்து வரும் கொல்கத்தா சற்றுமுன் வரை 9 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 89 ரன்கள் எடுத்துள்ளது


இதில் மேலும் படிக்கவும் :