1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. ஐபிஎல் 2019
  4. Kings XI Punjab won the toss and elected to field

சொந்த மண்ணில் ஐதராபாத்தை வீழ்த்துமா பஞ்சாப்?

ஐதராபாத்
ஐபிஎல் போட்டியின் 22வது போட்டி இன்று பஞ்சாப் மாநிலம் சண்டிகரில் நடைபெறவுள்ளது. பஞ்சாப் மற்றும் ஐதராபாத் அணிகளுக்கு இடையிலான இந்த போட்டிக்கு சற்றுமுன் டாஸ் போடப்பட்ட நிலையில் டாஸ் வெற்றி பெற்ற பஞ்சாப் அணி வழக்கம்போல் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து இன்னும் சற்று நேரத்தில் ஐதராபாத் அணி பேட்டிங் செய்யவுள்ளது.
 
இன்றைய ஆடும் 11 பேர் கொண்ட ஐதராபாத் அணியில் வார்னர், பெயர்ஸ்டோ, விஜய் சங்கர், மனிஷ் பாண்டே, யூசுப் பதான், தீபக் ஹூடா, முகமது நபி, ரஷித் கான், புவனேஷ்குமார், சந்தீப் ஷர்மா மற்றும் சித்தார்த் கெளல் ஆகியோர் உள்ளனர்,
 
அதேபோல் பஞ்சாப் அணியில் கே.எல்.ராகுல், கிறிஸ் கெயில், மயங் அகர்வால், சர்ஃபீஸ்கான், டேவிட் மில்லர், மந்தீப் சிங், சாம் கர்ரான், அஸ்வின், அன்கிட் ராஜ்புத், முகமது ஷமி, முஜீப் ரஹ்மான் ஆகியோர் உள்ளனர்.
 
இரு அணிகளும் தலா மூன்று வெற்றிகளை பெற்று 6 புள்ளிகளுடன் இருப்பதால் இன்று வெற்றி பெறும் அணி 8 புள்ளிகள் பெற்று முதல் மூன்று இடங்களில் ஒரு இடத்தில் இடம்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது
அடுத்த கட்டுரையில்
பஞ்சாப் அணிக்கு 151 ரன்கள் இலக்கு கொடுத்த ஐதராபாத்!