ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : சனி, 6 ஏப்ரல் 2019 (12:27 IST)

பஞ்சாப் vs சென்னை – முதலிடத்துக்குப் போட்டி !

12-ஆவது ஐபில் போட்டியின் 18 ஆவது போட்டியில் இன்று சென்னை பஞ்சாப் அணிகள் மோத இருக்கின்றன.

12 ஆவது ஐபில் போட்டிகள் கடந்த மார்ச் 23 ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இதுவரை 17 போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. இன்று நடக்கும் முதல் போட்டியில் சென்னை பஞ்சாப் அணிகள் மோத இருக்கின்றன். இரு அணிகளும் சமபலம் கொண்டு சிறப்பாக விளையாடி வருவதால் சென்னையில் நடக்கும் இன்றையப் போட்டி இரு அணிகளுக்கும் பலப்பரீட்சையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இரு அணிகளும் இதுவரை 4 போட்டிகளில் விளையாடி மூன்றில் வெற்றியும் ஒன்றில் தோல்வியும் அடைந்துள்ளன. ஆனால் நெட் ரன்ரேட் படி பஞ்சாப் அணி மூன்றாம் இடத்திலும் சென்னை அணி 4 ஆம் இடத்திலும் உள்ளன. இரு அணிகளும் இதுவரை 19 முறை நேருக்கு நேர் ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ளனர். அதில் 11 முறை சென்னை அணியும் பஞ்சாப் அணி 8 முறையும் வெற்றி பெற்றுள்ளன.

சென்னை அணி தோனி, வாட்ஸன், ரெய்னா, அம்பாத்தி ராயுடு என வலுவான பேட்டிங்கோடும் இம்ரான் தாஹீர், தாகூட், சஹார் என சிறப்பான பவுலிங் படையோடும் உள்ளது. அதேப் போல பஞ்சாப் அணியிலும் கெய்ல், ராகுல், மில்லர் என பேட்டிங்கையும் அஸ்வின், டை , அக்ஸர் படேல் என சிறப்பான பவுலிங்கையும் கொண்டுள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.