புதன், 25 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. ஐபிஎல் 2019
Written By
Last Updated : சனி, 6 ஏப்ரல் 2019 (19:51 IST)

பஞ்சாப்பை வீழ்த்தி புள்ளி பட்டியலில் முதலிடத்தில் சிஎஸ்கே!

12 ஆவது ஐபில் போட்டிகள் கடந்த மார்ச் 23 ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இதுவரை 17 போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. 
 
இன்று நடந்த முதல் போட்டியில் சென்னை - பஞ்சாப் அணிகள் மோதின. இரு அணிகளும் சமபலம் கொண்டு சிறப்பாக விளையாடியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை பேட்டிங்கை தேர்வு செய்து 20 ஓவர் முடிவில் 160 ரன்களை குவித்தது. வாட்சன் 26 ரன்கள், டு பிளஸ்சி 54 ரன்கள், தோனி 37 ரன்கள், ராயுடு 21 ரன்கள், ரெய்னா 17 ரன்கள் எடுத்தனர். 
 
இதன் பின்னர் 161 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணியில் அதிகபட்சமாக கே.எல்.ராகுல் 55 ரன்கள், சர்ஃபராஸ்கான் 67 ரன்கள் குவித்தனர். இருப்பினும் பஞ்சாப் அணி வெற்றி இலக்கை எட்டவில்லை. சிஎஸ்கேவிடம் 22 ரன்கல் வித்யாசத்தில் தோல்வி அடைந்தது. 
 
இதன் மூலம் சென்னை அணி இந்த புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.