பஞ்சாப்பை பந்தாட துவங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ்

Last Updated: சனி, 6 ஏப்ரல் 2019 (16:22 IST)
12 ஆவது ஐபில் போட்டிகள் கடந்த மார்ச் 23 ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இதுவரை 17 போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. இன்று நடக்கும் முதல் போட்டியில் சென்னை பஞ்சாப் அணிகள் மோதுகின்றன. 
 
இரு அணிகளும் சமபலம் கொண்டு சிறப்பாக விளையாடி வருவதால் சென்னையில் நடக்கும் இன்றையப் போட்டி இரு அணிகளுக்கும் பலப்பரீட்சையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
இரு அணிகளும் இதுவரை 4 போட்டிகளில் விளையாடி மூன்றில் வெற்றியும் ஒன்றில் தோல்வியும் அடைந்துள்ளன. ஆனால் நெட் ரன்ரேட் படி பஞ்சாப் அணி மூன்றாம் இடத்திலும் சென்னை அணி 4 ஆம் இடத்திலும் உள்ளன. 
 
எனவே, இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. போட்டி தற்போது துவங்கியுள்ள நிலையில் டாஸ் வென்ற சென்னை அணி பேட்டிங் தேர்வு செய்து விளையாடி வருகிறது. சென்னை அணி துவக்கத்தையே அதிரடியாக துவங்கியுள்ளது. 


இதில் மேலும் படிக்கவும் :