1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. ஐபிஎல் 2019
  4. Kings XI Punjab require another 125 runs with 10 wickets and 12.5 overs remaining

மும்பை கொடுத்த 177 ரன்கள் இலக்கை எட்டுமா பஞ்சாப்?

மும்பை
ஐபிஎல் போட்டி தொடரில் இன்று இரண்டு போட்டிகள் நடைபெறவுள்ள நிலையில் முதல் போட்டி மும்பை மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையே தற்போது சண்டிகரில் நடைபெற்று வருகிறது 
 
இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்துவீச முடிவு செய்ததால் மும்பை அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டகாரர்களாகிய ரோஹித் சர்மா மற்றும் டீகாக் நல்ல ஆரம்பத்தை கொடுத்தனர். ரோஹித் 32 ரன்களும், டீகாக் 60 ரன்களும் எடுத்த நிலையில் கடைசி நேரத்தில் ஹர்திக் பாண்ட்யா அடித்த அதிரடி 31 ரன்களால் மும்பை அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 176 ரன்கள் எடுத்துள்ளது
 
இந்த நிலையில் 177 ரன்கள் என்ற இலக்கை நோக்கி தற்போது பஞ்சாப் அணி விளையாடி வருகிறது. சற்றுமுன் வரை அந்த அணி 7 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 52 ரன்கள் எடுத்துள்ளது. கே.எல்.ராகுல் மற்றும் கிறிஸ் கெயில் விளையாடி வருகின்றனர்
 
மும்பை, பஞ்சாப் ஆகிய இரு அணிகளுமே தலா ஒரு போட்டிகளில் வென்றுள்ளதால் இன்று வெற்றி அடையும் அணிக்கு இரண்டாவது வெற்றி கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இன்று இரவு எட்டு மணிக்கு டெல்லி மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையே டெல்லியில் நடைபெறவுள்ளது
அடுத்த கட்டுரையில்
கே.எல்.ராகுல் அதிரடி: மும்பையை வீழ்த்தியது பஞ்சாப்!