பஞ்சாப் பந்துவீச்சை புரட்டி எடுத்த கொல்கத்தா! 219 ரன்கள் இலக்கு

Last Modified புதன், 27 மார்ச் 2019 (22:12 IST)
ஐபிஎல் 2019 கிரிக்கெட் தொடர் போட்டியின் 6வது போட்டி இன்று கொல்கத்தாவில் கொல்கத்தா மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது.
இன்றைய போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து முதலில் பேட்டிங் களமிறங்கிய கொல்கத்தா, பஞ்சாப் பந்துவீச்சாளர்களின் பந்துகளை துவம்சம் செய்தது. ராபின் உத்தப்பா 67 ரன்களும், ரானா 63 ரன்களும், ருசல் 48 ரன்களும் அதிரடியாக குவித்ததால் கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 218 ரன்களை குவித்தனர்.
பஞ்சாப் பந்துவீச்சாளர்களான அஸ்வின் 4 ஓவர்களில் 47 ரன்களும், முகமது ஷமி 4 ஓவர்களில் 44 ரன்களும், கொடுத்து மோசமான பந்துவீச்சை பதிவு செய்தனர்

இந்த நிலையில் 219 என்ற இலக்கை நோக்கி விளையாடி வரும் பஞ்சாப் அணி சற்றுமுன் வரை 3 ஓவர்களில் ஒரு விக்கெட்டை இழந்து 25 ரன்கள் எடுத்துள்ளனர். தொடக்க ஆட்டக்காரர் கே.எல்.ராகுல் ஒரு ரன்னில் ஆட்டமிழந்தார்.


இதில் மேலும் படிக்கவும் :