பஞ்சாப் vs மும்பை – சொந்த மண்ணில் பஞ்சாப்பிற்கு எதிராக யுவி !

Last Modified சனி, 30 மார்ச் 2019 (13:56 IST)
பஞ்சாப் மற்றும் மும்பை அணிகளுக்கு இடையிலானப் போட்டி இன்று பஞ்சாப்பில் நடக்க இருக்கிறது.

12 ஆவது ஐபிஎல் போட்டிகள் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. ஒரு வார காலமாக பரபரப்புகளுக்குப் பஞ்சம் இல்லாமல் போட்டிகல் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் இன்று  நடைபெறும் முதல் போட்டியில் மும்பை மற்றும் பஞ்சாப் அணிகள் மோத இருக்கின்றன.
 
பஞ்சாப் மற்றும் மும்பை அணிகள் இதுவரை இரண்டு போட்டிகளில் விளையாடி தலா 1 போட்டிகளை வென்றுள்ளன. பஞ்சாப் அணி மன்கட் சர்ச்சையிலும் மும்பை அணி கடைசி பால் நோ பால் சர்ச்சையிலும் சிக்கியுள்ளன. இரு அணிகளுமே பேட்டிங்கில் அசுரபலத்தில் உள்ளன.
 
ரோஹித், யுவ்ராஜ், பொல்லார்டு, பாண்ட்யா பிரதர்ஸ் என மும்பை அணி மிரட்டுகிறது. பவுலிங்கிலும் பூம்ரா, மலிங்கா என உலகத்தரம் வாய்ந்த பவுலர்கள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். பஞ்சாப் அணியில் ராகுல், கெய்ல் மற்றும் மில்லர் என அதிரடி மன்னர்கள் உள்ளனர். சில ஆண்டுகளுக்குப் பிறகு பார்முக்கு திரும்பியுள்ள யுவ்ராஜ் இன்று தனது சொந்த மண்ணில் பஞ்சாப் அணிக்கு எதிராக விளையாட இருக்கிறார். இதனால் களத்தில் அனல் பறக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
 
இன்று வார இறுதி நாள் என்பதால் இரண்டு போட்டிகள் நடைபெற இருக்கின்றன. முதல் போட்டி 4 மணிக்குத் தொடங்க இருக்கிறது. இரண்டாவது போட்டியில் கொல்கத்தா மற்றும் டெல்லி அணிகள் மோத இருக்கின்றன.இதில் மேலும் படிக்கவும் :