தோனியின் அதிரடி பேட்டிங்-ஸ்டெம்பிங்; 80 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

Last Modified வியாழன், 2 மே 2019 (06:15 IST)
ஐபிஎல் போட்டி தொடரின் 50வது லீக் போட்டி நேற்று சென்னை மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையே சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்தது. இந்த போட்டியில் தோனி அதிரடியாக 22 பந்துகளில் 44 ரன்கள் அடித்தார். அதுமட்டுமின்றி மிக அருமையாக இரண்டு ஸ்டெம்பிங் செய்தார். இதனையடுத்து சென்னை அணி நேற்றைய போட்டியில் 80 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று மீண்டும் புள்ளிப்பட்டியலில் 18 புள்ளிகள் பெற்று முதலிடத்தை பிடித்தது. தோனி ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

ஸ்கோர் விபரம்:

சென்னை அணி: 179/4
20 ஓவர்கள்

சுரேஷ் ரெய்னா: 59
தோனி: 44
டீபிளஸ்சிஸ்: 39
ஜடேஜா: 25

டெல்லி அணி: 99/10 16.2 ஓவர்கள்

ஸ்ரேயாஸ் ஐயர்: 44
தவான்; 19
இங்க்ராம்: 9
அமித் மிஷ்ரா: 8

இன்றைய போட்டி: மும்பை மற்றும் ஐதராபாத்


இதில் மேலும் படிக்கவும் :