திங்கள், 27 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: புதன், 1 மே 2019 (21:15 IST)

பஞ்சாப் அணி சஸ்பெண்ட் ஆகுமா ? – நெஸ் வாடியா கைதால் சிக்கல் !

ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்று விளையாடி வரும் பஞ்சாப் அணி அதன் உரிமையாளர் கைதால் சஸ்பெண்ட் செய்யப்படலாம் என்ற அச்சுறுத்தலுக்கு ஆளாகியுள்ளது.

முகமது அலி ஜின்னாவின் கொள்ளுப் பேரனான நெஸ் வாடியா கடந்த மாதம் ஜப்பானின் ஹொக்காய்டோ தீவுக்குச் சென்றிருந்தார். அப்போது அவரிடம் இருந்து 25 கிராம் கஞ்சா ஜப்பான் போலிஸாரால் கைப்பற்றப்பட்டது. இதனையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.
தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களை கொண்டு வந்ததாக அவர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் இப்போது சப்போரோநீதிமன்றம் அவருக்கு  2 ஆண்டுகாலம் சிறைத் தண்டனை விதித்துள்ளது. நெஸ் வாடியா கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் இணை உரிமையாளராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐபிஎல் விதிமுறைகளின் படி அணியின் உரிமையாளர்கள் அல்லது நிர்வாகிகள் யாராவது அணி அல்லது ஐபிஎல் நிர்வாகத்திற்கு களங்கம் விளைவிக்கும் விதமாக நடந்துகொண்டால் அணியை சஸ்பெண்ட் செய்ய பிசிசிஐ க்கு அதிகாரம் உண்டு. இந்த விதிகளின் படியே சிஎஸ்கே அணியின் நிர்வாகி குருநாத் மெய்யப்பன் சூதாட்டப் புகாரில் சிக்கியபோது சென்னை அணி 2 ஆண்டுகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டது.

அதனால் பஞ்சாப் அணிக்கும் அதே விதமான தண்டனைக் கிடைக்க வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பான விசாரணையை பிசிசிஐ குறைதீர்ப்பு அதிகாரி விரைவில் ஆரம்பிப்பார் எனத் தெரிகிறது.