பொளந்து கட்டிய டிவில்லியர்ஸ்: பஞ்சாப் அணிக்கு 203 ரன்கள் இலக்கு

Last Updated: புதன், 24 ஏப்ரல் 2019 (22:15 IST)
இன்றைய ஐபிஎல் லீக் போட்டியில் பஞ்சாப் மற்றும் பெங்களூரு அணிகள் விளையாடி வரும் நிலையில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை இழந்து 202 ரன்கள் எடுத்துள்ளது. டிவில்லியர்ஸ் 44 பந்துகளில் 82 ரன்கள் அடித்து பஞ்சாப் பந்துவீச்சாளர்களை பொளந்து கட்டினார். இதில் ஏழு சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் அடங்கும்
 
அதேபோல் கடைசி நேரத்தில் களமிறங்கிய ஸ்டோனிஸ் 34 பந்துகளில் 46 ரன்கள் குவித்தார். முன்னதாக ஓப்பனிங் பேட்ஸ்மேன் பார்த்தீவ் பட்டேல் 43 ரன்கள் அடித்து நல்ல தொடக்கத்தை கொடுத்தார்.
 
பெங்களூரு அணி 15 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுக்களை இழந்து 122 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. அதன்பின்னர் டிவில்லியர்ஸ் மற்றும் ஸ்டோனிஸ் இருவரும் ருத்ரதாண்டவம் ஆடி, ஐந்து ஓவர்களில் 80 ரன்கள் எடுத்தனர். குறிப்பாக 19வது ஓவரில் 21 ரன்களும், 20வது ஓவரில் 27 ரன்களும் அடித்ததால் ஸ்கோர் 200ஐ தாண்டியது
 
இந்த நிலையில் 203 என்ற இலக்கை நோக்கி தற்போது பஞ்சாப் அணியினர் விளையாடி வருகின்றனர். இந்த இமாலய ஸ்கோரை எட்ட வேண்டும் என்றால் பஞ்சாப் பேட்ஸ்மேன்கள் காட்டு காட்டு என்ற காட்ட வேண்டும். என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்இதில் மேலும் படிக்கவும் :