புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: சனி, 27 ஏப்ரல் 2019 (19:29 IST)

கவுதம் காம்பீர் மீது வழக்குப்பதிவு செய்த தேர்தல் ஆணையம்!

சமீபத்தில் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்த பிரபல கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர் கிழக்கு டெல்லி தொகுதியின் பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இதனையடுத்து அவர் கடந்த சில நாட்களாக தொகுதி முழுவதும் தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார்
 
இந்த நிலையில் தேர்தல் விதிமுறையை மீறியதாக கவுதம் காம்பீர் மீது தேர்தல் ஆணையம் வழக்குப்பதிவு செய்துள்ளது. கிழக்கு டெல்லி தொகுதியிலுள்ள ஜன்ங்புரா என்னும் பகுதியில், கடந்த 25ஆம் தேதி பாஜக சார்பில் தேர்தல் பேரணி ஒன்று நடைபெற்றது. இந்த பேரணிக்கு கவுதம் காம்பீர் உரிய முன் அனுமதியை பெறவில்லை என கூறப்படுகிறது.
 
இதையடுத்து, தேர்தல் ஆணையத்திடம் இந்த விவகாரத்தை எதிர்க்கட்சிகள் கவனத்துக்கு கொண்டு வந்த நிலையில், காம்பிர் மீது வழக்குப்பதிவு செய்த தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்தது. இதனையடுத்து டெல்லி காவல்துறை, இது தொடர்பாக வழக்குப்ப்திவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகிறது.