ராஜஸ்தானுக்கு 161 ரன்கள் இலக்கு கொடுத்த ஐதராபாத்

Last Modified சனி, 27 ஏப்ரல் 2019 (21:43 IST)
 
ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் இன்று நடைபெற்று வரும் ராஜஸ்தான் மற்றும் ஐதராபாத் அணிகளுக்கு இடையிலான 45வது ஐபிஎல் லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 160 ரன்கள் எடுத்துள்ளது. 
 
அந்த அணியின் பாண்டே 61 ரன்களும், வார்னர் 37 ரன்களும் எடுத்தனர். கேப்டன் வில்லியம்சன் 13 ரன்களும், மற்ற பேட்ஸ்மேன்கள் சிங்கிள் டிஜிட்டலும் ரன்களை எடுத்தனர். ரஷித்கான் கடைசி நேரத்தில் அதிரடியாக விளையாடி 8 பந்தில் 17 ரன்கள் எடுத்தார்.
 
ராஜஸ்தான் அணியின் ஆரோன், தாமஸ், கோபால், உனாகட் ஆகியோர் தலா நான்கு விக்கெட்டுக்களை வீழ்த்தியுள்ளனர்.
 
இந்த நிலையில் 161  ரன்கள் என்ற இலக்கை நோக்கி இன்னும் சில நிமிடங்களில் ராஜஸ்தான் அணி பேட்டிங் செய்யவுள்ளனர். அந்த அணியின் ரஹானே, சாம்சன், ஸ்மித், லிவிங்ஸ்டோன், டர்னர், பராக் ஆகியோர் நல்ல ஃபார்மில் இருப்பதால் இந்த எளிய இலக்கை ராஜஸ்தான் பெற்று வெற்றியடையும் என எதிர்பார்க்கப்படுகிறது


இதில் மேலும் படிக்கவும் :