டாஸ் வென்ற ராஜஸ்தான்: ஐதராபாத்தை வீழ்த்துமா?

Last Modified சனி, 27 ஏப்ரல் 2019 (19:40 IST)
ஐபிஎல் கிரிக்கெட் போட்டி தொடரின் 45வது லீக் போட்டி இன்று ஜெய்ப்பூரில் நடைபெறவுள்ளது. இன்றைய போட்டியில் ராஜஸ்தான் ராயல் மற்றும் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதவுள்ளன.
இன்றைய போட்டிக்கான டாஸ் சற்றுமுன் போடப்பட்ட நிலையில் ராஜஸ்தான் அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் டாஸ் வென்று முதலில் பந்துவீச முடிவு செய்துள்ளார். இதனையடுத்து ஐதராபாத் அணி இன்னும் சில நிமிடங்களில் பேட்டிங் செய்யவுள்ளது

இன்றைய ராஜஸ்தான் அணியில் லியாம் லிவிங்ஸ்டன் மற்றும் ஆஷ்டன் டர்னர்
ஆகியோர் இணைந்துள்ளனர். இவர்களுக்கு பதிலாக பென் ஸ்டோக்ஸ் மற்றும் ஆர்ச்சர் ஆகியோர் இன்றைய போட்டியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். அதேபோல் சன் ரைசர்ஸ் அணியில் வில்லியம்சன் மீண்டும் இணைந்துள்ளார்.
இன்றைய போட்டியில் ஐதராபாத் அணி வெற்றி பெற்றால் 12 புள்ளிகள் எடுத்து அடுத்த சுற்றுக்கான வாய்ப்பை அதிகப்படுத்தி கொள்ளும். அதேபோல் ராஜஸ்தான் வெற்றி பெற்றால் 10 புள்ளிகள் பெற்று அடுத்த சுற்றுக்கு தகுதி பெறும் அணிகளின் பட்டியலில் இடம்பெறும்


இதில் மேலும் படிக்கவும் :