தொடர்புடைய செய்திகள்
- விஸ்வரூபம் எடுக்கும் மன்கட் பிரச்சனை – ஐபிஎல் தொடரில் இருந்து நீக்கப்படுமா ?
- ஐபிஎல் ஃபிவர்: நீயா? நானா? போட்டியில் நெட்வொர்க் நிறுவனங்கள்!
- நான் செய்ததில் எந்த தவறும் இல்லை – அஸ்வின் ஓபன் டாக் !
- பட்லர் ரன் அவுட்டால் பஞ்சாப் வெற்றி: சொந்த மண்ணில் ராஜஸ்தான் தோல்வி
- மும்பையை சொந்த மண்ணில் வீழ்த்திய டெல்லி: ரிஷப் பண்ட் அபாரம்
ஐபிஎல் மன்கட் சர்ச்சை: அஸ்வின் லேசுப்பட்ட ஆளில்ல...
நேற்று நடைபெற்ற 12 ஆவது ஐபிஎல் போட்டிகளின் 4 ஆவது ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் பஞ்சாப் அணிகள் மோதின. இந்த போட்டியில் ராஜஸ்தான் அணி தோல்வி அடைந்தது.
இந்த தோல்விக்கு மிக முக்கியமான காரணங்களில் ஒன்றாக ஜோஸ் பட்லரை அஸ்வின் மன்கட் முறையில் அவுட் ஆக்கியது கூறப்படுகிறது. ஆனால், மன்கட் முறையில் அஸ்வின் பேட்ஸ்மேனை எச்சரிக்காமல் முதல் முறையே அவுட் ஆக்கியது ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களால் கடுமையாக விமர்சனம் செய்யப்பட்டது.
இந்நிலையில், ஆஸ்வின் இது போன்று செய்வது முதல் முறை அல்ல. இது போன்று ஏற்கனவே ஒரு முறை செய்து உள்ளார் என கைஃப் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியது பின்வருமாறு...
அஸ்வின் ஏற்கனவே சர்வதேச போட்டி ஒன்றில் இது போல அவுட் செய்துவிட்டு அவுட் கேட்டார். அந்த போட்டியின் கேப்டன் சேவாக் அதை தடுத்து நிறுத்தினார். அம்பயரிடம் அப்பீல் கேட்கவில்லை என கூறிவிட்டார். இந்த சம்பவம் 2012-ல் இலங்கைக்கு எதிரான போட்டியின் போது நடந்தது.
அடுத்த கட்டுரையில்