ஞாயிறு, 24 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 26 மார்ச் 2019 (13:12 IST)

ஐபிஎல் ஃபிவர்: நீயா? நானா? போட்டியில் நெட்வொர்க் நிறுவனங்கள்!

ஐபிஎல் போட்டிகள் துவங்கியுள்ள நிலையில் நெட்வொர்க் நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு ஆஃபர்களை வழங்கியுள்ளன. அப்படி ஜியோ, ஏர்டெல், பிஎஸ்என்எல், வோடபோன் ஐடியா நிறுவனங்கள் வழங்கியுள்ள ஆஃபர் பட்டியல் பின்வருமாறு... 
 
ஜியோ ரூ.197 பேக்:
ஜியோவின் ரூ.197 ஐபிஎல் பேக்கில் தினசரி 2 ஜிபி டேட்டா. ஹாட் ஸ்டாரை இலவசமாக அணுகும் சேவை. வரம்பற்ற குரல் அழைப்புகள், இலவச எஸ்.எம்.எஸ் ஆகியவை 38 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. 
 
ஜியோ ரூ.299 பேக்:
ஜியோவின் ரூ.299 பேக்கில் தினமும் 3 ஜிபி டேட்டா, ஹாட் ஸ்டாருக்கு இலவச ஆக்ஸிஸ். வரம்பற்ற குரல் அழைப்புகள், இலவச எஸ்.எம்.எஸ் ஆகியவையும் வழங்கப்படுகிறது.  
ஏர்டெல் ரூ.249 பேக்:
ரூ.249-க்கு நாள் ஒன்றுக்கு 2 ஜிபி தரவு மற்றும் வரம்பற்ற அழைப்புகள், 100 எஸ்எம்எஸ் மற்றும் ஏர்டெல் டிவி சேவை ஆகியவை 28 நாட்களுக்கு வழங்கபடும். 
 
ஏர்டெல் ரூ.448 பேக்:
ஏர்டெல்-ன் ரூ.448 திட்டத்தில் நாள் ஒன்றுக்கு 1.5 ஜி.பி டேட்டா, வரம்பற்ற அழைப்புகள், 100 எஸ்எம்எஸ் மற்றும் 82 நாட்களுக்கு ஏர்டெல் டிவி ஆகிய சேவை வழங்கப்படுகிறது. 
பிஎஸ்என்எல் ரூ.199 பேக்:
பிஎஸ்என்எல் சிறப்பு கிரிக்கெட் ரூ.199 திட்டம் ஒரு நாளைக்கு 1 ஜிபி அதிவேக டேட்டா, வரம்பற்ற குரல் அழைப்பு, இலவசமாக 100 எஸ்எம்எஸ் மற்றும் இலவச கிரிக்கெட் எஸ்எம்எஸ் நோட்டிஃபிகேஷன் 28 நாட்களுக்கு வழங்குகிறது.  
 
பிஎஸ்என்எல் ரூ.499 பேக்:
ரூ.199 திட்டங்களை போலவே, பிஎஸ்என்எல் கிரிக்கெட் ரூ.499 திட்டத்திலும் அனைத்து சேவையும் வழங்கப்படுகிறது. இச்சலுகை 90 நாட்கள் வேலிடிட்டி கொண்டிருக்கிறது. 
வோடபோன் - ஐடியா ரூ.511 பேக்:
​​வோடபோன் - ஐடியா திட்டத்தில் ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டா, வரம்பற்ற அழைப்புகள், 100 எஸ்.எம்.எஸ் மற்றும் நேரடி டிவி, 84 நாட்களுக்கு வழங்கப்படுகிறது.