புதன், 25 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. ஐபிஎல் 2019
Written By
Last Modified: ஞாயிறு, 31 மார்ச் 2019 (17:50 IST)

232 ரன்கள் டார்கெட் கொடுத்த சன்ரைசர்ஸ்... சமாளிக்குமா பெங்களூர் அணி?

பெங்களூர்  மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலானப் போட்டியில் ஹைதராபாத் அணி 232 ரன்கள் டார்கெட் கொடுத்துள்ளது.
12 ஆவது ஐபிஎல் போட்டிகள் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. பரபரப்புகளுக்குப் பஞ்சம் இல்லாமல் போட்டிகல் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் இன்று  நடைபெறும் முதல் போட்டியில் பெங்களூர்  மற்றும் ஹைதராபாத் அணிகள் மோத இருக்கின்றன.
 
கடந்த 24ந் தேதி கொல்கத்தா அணியிடம் மோதிய ஹைதராபாத் அணி தோல்வியை தழுவியது. 29ந் தேதி ராஜஸ்தானுடம் அடிய ஆட்டத்தில் ஹைரதாபாத் வெற்றிபெற்றது.
 
ஆனால் பெங்களூர் அணி இதுவரை விளையாடிய 2 ஆட்டங்களிலுமே தோல்வியை சந்தித்துள்ளது.
 
இன்று ஹைதராபாத் ராஜீவ் காந்தி ஸ்டேடியத்தில் நடைபெற்று வரும் ஆட்டத்தில் டாஸ் வென்ற பெங்களூர் அணி பவுலிங் செய்ய முடிவு செய்தது.  மேட்ச் தொடங்கியதிலிருந்தே ஹைதராபாத் வீரர்கள் சிறப்பாக விளையாடி 20 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 231 ரன்களை குவித்துள்ளனர். ஜானி 114 ரன்களை எடுத்து அவுட்டானார். விஜய் சங்கர் 9 ரன்களில் அவுட்டானார். வார்னர் 100 ரன்களை எடுத்து அவுட்டாகாமல் இருந்தார். 
 
232 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்குகிறது பெங்களூர் அணி. இந்த டஃப் ஸ்கோரை எப்படி எடுக்கப்போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.