வியாழன், 26 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: ஞாயிறு, 31 மார்ச் 2019 (13:14 IST)

மீண்டும் ஒரு மன்கட் – ஜெண்டில்மேன் குருனால் பாண்ட்யா !

இந்த ஐபிஎல்லின் முதல் சர்ச்சையாகத் தொடங்கிய மன்கட்டிங் விக்கெட் சர்ச்சை இன்னும் ஓயாமல் சுழன்றடிக்கிறது.

12 ஆவது ஐபிஎல் போட்டிகளின் 4 ஆவது ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் பஞ்சாப் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் ஜோஸ் பட்லரை அஸ்வின் மன்கட் முறையில் அவுட் ஆக்கியனார். மன்கட் முறையில் பேட்ஸ்மேனை எச்சரிக்காமல் முதல் முறையே அவுட் ஆக்கியது ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களால் கடுமையாக விமர்சனம் செய்யப்பட்டது.

இதையடுத்து அஸ்வின் தான் செய்தது ஒன்றும் விதிமுறைகளுக்கு அப்பாற்பட்டதல்ல என விளக்கம் அளித்துள்ளார். ஆனாலும் அதை ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் ஏற்றுக்கொள்வதாயில்லை. அஸ்வின் கிரிக்கெட்டின் ஸ்பிரிட்டை மதிக்கவில்லை எனக் குற்றம்சாட்டி வருகின்றனர்.

இந்த சர்ச்சை ஓய்ந்த சில நாட்களுக்குள்ளாகவே அடுத்த ஒரு நிகழ்வின் மூலமாக ரசிகர்கள் மீண்டும் அஸ்வினைத் திட்டி வருகின்றனர். நேற்று நடைபற்ற பஞ்சாப் மும்பை போட்டியில் பஞ்சாப் வீரர் மயங்க் அகர்வாலை இது போல மன்கட் முறையில் அவுட் ஆக்கும் வாய்ப்பு கிடைத்தும் குருனால் பாண்ட்யா அதுபோல அவுட் ஆக்காமல் எச்சரித்து அனுப்பினார். இதைப்பார்த்த ரசிகர்கள் இதுதான் ஜெண்டில்மேன்களின் கேம் என மீண்டும் அஸ்வினை வறுத்தெடுக்க ஆரம்பித்துள்ளனர்.