மும்பை அணிக்கு 214 ரன்கள் இலக்கு கொடுத்த டெல்லி

Last Updated: ஞாயிறு, 24 மார்ச் 2019 (22:15 IST)
ஐபிஎல் 2019 போட்டியில் இன்று நடைபெற்ற முதல் போட்டியில் கொல்கத்தா வெற்றி பெற்ற நிலையில் தற்போது மும்பையில் அடுத்த போட்டி நடைபெற்று வருகிறது.
 
இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது. இதனையடுத்து டெல்லி அணி முதலில் களமிறங்கியது.
 
டெல்லி அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷா 7 ரன்களில் தனது விக்கெட்டை பறிகொடுத்தாலும் மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் பொறுப்புடன் விளையாடி 36 பந்துகளில் 43 ரன்கள் எடுத்தார். அதனை தொடர்ந்து இன்க்ராம் 47 ரன்கள் எடுத்தார்.
 
இதனையடுத்து களமிறங்கிய ரிஷப் பண்ட் தனது அதிரடி ஆட்டத்தின் மூலம் 27 பந்துகளில் 78 ரன்கள் எடுத்தார். இதனால் டெல்லி அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து 213 ரன்கள் எடுத்தது. 
 
இன்னும் சில நிமிடங்களில் 214 என்ற இலக்கை நோக்கி மும்பை அணி பேட்டிங் செய்யவுள்ளதுஇதில் மேலும் படிக்கவும் :