ரயில் நிலையத்தில் இடிந்து விழுந்த பயணிகள் நடைபாதை: பலர் காயம் என தகவல்

Last Modified வியாழன், 14 மார்ச் 2019 (20:40 IST)
மும்பையில் சத்ரபதி சிவாஜி ரயில் நிலையம் அருகே உள்ள பயணிகள் நடை மேம்பாலம் இடிந்து விழுந்ததில் ஏராளமானோர் காயம் என முதல்கட்ட தகவல் வெளிவந்துள்ளது
சற்றுமுன் மும்பையில் சத்ரபதி சிவாஜி ரயில் நிலையம் அருகே உள்ள பயணிகள் நடை மேம்பாலத்தில் ஒரே நேரத்தில் அதிக கூட்டமாக பயணிகள் நடைபாதையை கடக்க முயன்றதால் பயணிகளின் பாரம் தாங்காமல் சரிந்தது. இதில் இடிபாடுகளுக்கு இடையே பலர் சிக்கியிருப்பதாக கூறப்படுகிறது.

இந்த விபத்து குறித்த தகவல் அறிந்த மீட்புப்படையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தனர். இதுவரை 16 பேர் இந்த விபத்தில் காயம் அடைந்திருப்பதாகவும், அவர்கள் அனைவரும் மும்பை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

இன்னும் மீட்புப்பணிகள் நடந்து வருவதால் காயம் அடைந்தவர்களின் எண்ணிகை குறித்த முழுவிபரங்கள் இன்னும் சிறிது நேரத்தில் அறிவிக்கப்படும் என தெரிகிறது.


இதில் மேலும் படிக்கவும் :