ரயில் நிலையத்தில் இடிந்து விழுந்த நடைபாதை: 6 பேர் பரிதாப பலி

Last Modified வெள்ளி, 15 மார்ச் 2019 (08:48 IST)
மும்பை ரயில் நிலையத்தில் மேம்பாலம் இடிந்து விழுந்த விபத்தில் 6 பேர் பலியாகி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
மும்பையில் சத்ரபதி சிவாஜி ரயில் நிலையம்  எப்பொழுது பரப்பாக காணப்படும். அங்குள்ள  பயணிகள் நடை மேம்பாலம் நேற்று மாலை 7.30 மணி அளவில் இடிந்து விழுந்தது. இந்த இடிபாடுகளில் சிக்கிய மக்கள் அலறினர். 
 
இந்த விபத்து குறித்த தகவல் அறிந்த மீட்புப்படையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து இடிபாடுகளில் சிக்கியிருந்தவர்களை மீட்டனர்.
 
இடிபாடுகளில் சிக்கி 6 பேர் பலியாகி இருப்பதாகவும் 35 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :