வியாழன், 26 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: சனி, 16 மார்ச் 2019 (08:34 IST)

பாண்டிங்குடன் கைகோர்க்கும் கங்குலி – கரைதேறுமா டெல்லி ?

இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகளில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலியும் ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங்கும் டெல்லி அணிக்கு பயிற்சியாளர் மற்றும் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஐபிஎல் போட்டிகளில் மிகவும் ஏமாற்றமளித்த அணிகளின் பட்டியலில் கண்டிப்பாக டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கு முக்கியமானப் பங்குண்டு. சேவாக் தலைமையேற்ற ஒருமுறை மட்டுமே அந்த அணி ஐபிஎல் போட்டிகளின் பைனலுக்கு முன்னேறியது. அதுவே அந்த அணியின் உச்சபட்ச சாதனையாக இருந்து வருகிறது.

அதையடுத்து அந்த அணி நிர்வாகம் நிறைய வீரர்கள் மாற்றம்  செய்தும் பலன் எதுவும் கிடைக்கவில்லை. அதனால் டெல்லி டேர்டெவில்ஸ் அணி இந்த முறை டெல்லி கேபிடல்ஸ் எனும் பெயரில் களமிறங்க இருக்கிறது. இளம் வீரர்கள் அதிகளவில் கொண்டுள்ள டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு பயிற்சியாளராக ஆஸ்திரேலிய ஜாம்பவான் ரிக்கி பாண்டிங் நியமிக்கப்பட்டுள்ளார்.

அதையடுத்து அணிக்கு வலுசேர்க்கும் விதமாக் இப்போது இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி அந்த அணிக்கு ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார். இரண்டு ஜாம்பவான்கள் இளம் டெல்லி அணிக்கு முதுகெலும்பாக இருப்பதால் இந்த் ஆண்டு டெல்லி அணி சிறப்பாக விளையாடும் என எதிர்பார்க்கப்படுகிறது.