ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. ஐபிஎல் 2019
Written By
Last Modified: வியாழன், 2 மே 2019 (21:47 IST)

சொதப்பிய மும்பை பேட்ஸ்மேன்கள்: ஐதராபாத்துக்கு 163 ரன்கள் மட்டுமே இலக்கு

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் போட்டியின் இன்றைய முக்கிய போட்டியில் மும்பை அணியின் முன்னணி பேட்ஸ்மேன்கள் சொதப்பியதால் 20 ஓவர்களில் அந்த அணி 5 விக்கெட்டுக்களை இழந்து 163 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது. 
 
 மும்பை அணியின் கேப்டன் ரோஹித் சர்மா 24 ரன்களிலும், சூர்யபிரகாஷ் யாதவ் 23 ரன்களிலும், லீவிஸ் ஒரு ரன்னிலும், ஹர்திக் பாண்டியா 18 ரன்களிலும் பொல்லார்ட் 10 ரன்களிலும் அவுட் ஆடினர். ஒர் பக்கம் டீகாக் மட்டும் நிலைத்து நின்று 69 ரன்கள் எடுத்தார்.
 
 டி20 போட்டியில் முக்கிய ஓவர்களாக கருதப்படும் 19 மற்றும் 20வது ஓவர்களில் மும்பை பேட்ஸ்மேன்கள் ரன்கள் எடுக்க திணறினர். 19வது ஓவரில் 4 ரன்களும், 20 வது ஓவரில் ஒரு விக்கெட்டை இழந்து  11 ரன்களும் மட்டுமே மும்பை பேட்ஸ்மேன்கள் எடுத்தனர்.
 
இந்த நிலையில் 163 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஐதராபாத் அணி இன்னும் சற்று நேரத்தில் விளையாடவுள்ளது. இந்த இலக்கை எளிதில் எட்டி அடுத்த சுற்றுக்கான வாய்ப்பை ஐதராபாத் அணி பெறுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்