பிராவோ அபார பந்துவீச்சு: 147 ரன்கள் மட்டுமே எடுத்த டெல்லி

Last Modified செவ்வாய், 26 மார்ச் 2019 (21:38 IST)
ஐபிஎல் போட்டி தொடரின் 5வது போட்டி இன்று டெல்லியில் சென்னை மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர், பேட்டிங்கை தேர்வு செய்து முதலில் களத்தில் இறங்கினார்.
தொடக்க ஆட்டக்காரர்கள் தவான், ஷா, மற்றும் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட் ஆகியோர் நிதானமாகவே விளையாடியதால் ரன்ரேட் ஆரம்பத்தில் இருந்தே மிதமாகவே இருந்தது.

இந்த நிலையில் பந்துவீச வந்த பிராவோ, முதல் ஓவரில் 17 ரன்களை கொடுத்திருந்தாலும் அதன் பின்னர் அடுத்த மூன்று ஓவர்களில் 3 விக்கெட்டுக்களை வீழ்த்தி திருப்புமுனையை ஏற்படுத்தினார். முக்கிய விக்கெட்டுக்களான தவான், ரிஷப் பண்ட் மற்றும் இங்க்ராம் ஆகியோர்களின் விக்கெட்டுக்களை அவர் வீழ்த்தினார்
இந்த நிலையில் டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 147 ரன்கள் எடுத்துள்ளது. தவான் 51 ரன்களும், ரிஷப் பண்ட் 25 ரன்களும், பிபி ஷா 24 ரன்களும் எடுத்துள்ளனர்.

இன்னும் சற்று நேரத்தில் 148 என்ற எளிய இலக்கை நோக்கி சென்னை அணி பேட்டிங் செய்யவுள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :