வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 26 மார்ச் 2019 (18:50 IST)

தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தவர்கள் எத்தனை பேர்?

தமிழகத்தில் நடைபெறவுள்ள மக்களவை தேர்தலில் போட்டியிட இன்றுடன் வேட்புமனு தாக்கல் முடிவடைந்த நிலையில் 39 தொகுதிகளில் மொத்தம் 935வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இவர்களில் 820 பேர் ஆண்கள் மற்றும் 113 பேர் பெண்கள் மற்றும் 2 பேர் திருநங்கைகள் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
அதிகபட்சமாக தென்சென்னையில் 39 ஆண்களும், 8 பெண்களும், ஒரு திருநங்கையும் என மொத்தம் 48 பேர் மனுதாக்கல் செய்துள்ளனர். தென்சென்னையை அடுத்து திருவண்ணாமலையில் 38 வேட்பாளர்களும், பொள்ளாச்சியில் 37 வேட்பாளர்களும், திருவண்ணாமலையில் 36 வேட்பாளர்களும் வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.,
 
குறைந்தபட்சமாக நீலகிரி தொகுதியில் 5 ஆண்கள் மற்றும் ஒரு பெண் என ஆறு வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். நீலகிரியை அடுத்து தென்காசியில் 9 வேட்பாளர்களும், பெரம்பலூரில் 13 வேட்பாளர்களும் வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.
 
இவர்களில் எத்தனை வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் ஏற்கபடும் எத்தனை வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என்பது நாளை நடைபெறும் வேட்புமனுக்கள் பரிசீலனைக்கு பின்னரே தெரியவரும்