செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. ஐபிஎல் 2018
Written By
Last Modified: புதன், 18 ஏப்ரல் 2018 (11:01 IST)

ஐபிஎல் போட்டி: மூன்றாவது வெற்றிக்காக களமிறங்கும் கொல்கத்தா மற்றும் ராஜஸ்தான் அணி

ஐபிஎல் தொடரின் 15-வது போட்டியில் கொல்கத்தா அணியும், ராஜஸ்தான் அணியும் இன்று மோதுகின்றன.
 
ஜெயப்பூரில் நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டியின் 15-வது ஆட்டத்தில் தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியும், ரகானே  தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதவுள்ளன. இந்த போட்டி இன்று இரவு 8 மணிக்கு தொடங்குகிறது.
 
கொல்கத்தா அணி இரண்டு வெற்றிகளையும், இரண்டு தோல்விகளையும் சந்தித்து நான்கு புள்ளி பெற்றுள்ளது. அதேபோல், ராஜஸ்தான் அணி இரண்டு வெற்றிகளையும், ஒரு தோல்விகளையும் சந்தித்து நான்கு புள்ளி பெற்றுள்ளது.
 
இந்நிலையில், இன்றைய போட்டியில் இரு அணியும் தங்களது மூன்றாவது வெற்றியை பதிவு செய்ய கடுமையாக போராடும் என நம்பப்படுகிறது.