வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. பிரபலமானவை
Written By
Last Modified: திங்கள், 16 ஏப்ரல் 2018 (23:30 IST)

71 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற கொல்கத்தா:

இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியின் 13வது ஆட்டம் கொல்கத்தா மைதானத்தில் கொல்கத்தா மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையே விறுவிறுப்புடன் நடைபெற்றது.
 
இந்த போட்டியில் டெல்லி அணி டாஸ் வெற்றி பெற்று பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனால் முதலில் களமிறங்கிய கொல்கத்தா அணி ராணா, ரசல் ஆகியோர்களின் அதிரடியால் 20 ஓவர்களில் 9 விக்கெட்டுக்களை இழந்து 200 ரன்கள் குவித்தது. ராணா 59 ரன்களும், ரசல் 41 ரன்களும் அடித்தனர்.
 
இந்த நிலையில் 201 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய டெல்லி அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. முதல் ஓவரிலேயே ராய் ஆட்டமிழந்தார். அதன் பின்னர் 2வது ஓவரில் எஸ்.எஸ் ஐயரும், 3வது ஓவரில் கேப்டன் காம்பீரும் அவுட் ஆகினர். இருப்பினும் பாண்ட் மற்றும் மேக்ஸ்வெல் ஆகிய இருவரும் அதிரடியாக விளையாடி முறையே 43 மற்றும் 47 ரன்களை குவித்தனர். இந்த நிலையில் இருவரும் அடுத்தடுத்து ஆட்டமிழந்ததால் டெல்லி அணி வெற்றிக்கு தடுமாறியது. 
 
கடைசியில் டெல்லி அணி 14.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 129 ரன்கள் மட்டுமே எடுத்ததால் கொல்கத்தா அணி 71 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.