1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. ஹாலிவுட்
  4. Tamil Nadu Census Directorate Releases Guidelines for Upcoming Population Enumeration Process

மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணிகள்: என்னென்ன விவரங்கள் கேட்கப்படாது? முழு விவரங்கள்..

மக்கள் தொகை கணக்கெடுப்பு
மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் தற்போது தொடங்கியுள்ள நிலையில், இது குறித்த முக்கிய தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. 
 
மக்களின் தனிப்பட்ட விவரங்கள் எதுவும் சேகரிக்கப்படாது என்றும், குடியுரிமை அல்லது வாக்குரிமை போன்றவற்றில் எந்தவித இடையூறும் ஏற்படாது என்றும் இது முற்றிலும் மக்கள் தொகை கணக்கெடுப்பு மட்டுமே என்றும் தெளிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
ஆன்லைன் மூலமாக தங்களின் சுய விவரங்களை பதிவு செய்த பின்னர், பெறப்படும் ரசீதை கணக்கெடுப்பு அலுவலகத்தில் காண்பித்து உறுதி செய்தால் மட்டுமே கணக்கெடுப்பு ஏற்றுக்கொள்ளப்படும் என்று தமிழ்நாடு மக்கள் தொகை கணக்கெடுப்பு இயக்குநர் அறிவித்துள்ளார்.
 
இதன் முதற்கட்டப் பணிகள் ஆகஸ்ட் 1 ஆம் தேதி தொடங்கியுள்ள நிலையில், கணக்கெடுப்பாளர்கள் நேரடியாக வீடுகளுக்கு சென்று தரவுகளை சேகரிக்க உள்ளனர். பொதுமக்கள் எவ்வித அச்சமும் கொள்ளத் தேவையில்லை என்றும், நாட்டின் வளர்ச்சி திட்டங்களுக்காக பொதுவான தகவல்கள் மட்டுமே சேகரிக்கப்படுவதால் சரியான விவரங்களை வழங்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 
 
தனிப்பட்ட தகவல்களை யாரும் வழங்க தேவையில்லை. மேலும், வெளிமாநிலங்களில் வசிப்பவர்கள் அந்தந்த இடங்களிலேயே விவரங்களை தெரிவிக்கலாம் என்றும், வீடுகளை எளிதில் அடையாளம் காண உயர் தெளிவுத்திறன் கொண்ட வரைபடங்கள் பயன்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
Godzilla Vs Kong படத்தில் சிறுமியாக நடித்த கெய்லி ஹாட்டில் மரணம்!. ரசிகர்கள் சோகம்!...