திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. ஹாலிவுட்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 28 நவம்பர் 2023 (17:49 IST)

இந்தியா சிறந்தவர்களின் கரங்களில் உள்ளது: பிரதமர் மோடியை புகழ்ந்த ஹாலிவுட் நடிகர்..!

இந்தியா சிறந்தவரின் கைகளில் உள்ளது என பிரபல ஹாலிவுட் நடிகர் மைக்கேல் டக்ளஸ் புகழாரம் சூட்டியுள்ளார்.

இரண்டு ஆஸ்கார் விருதுகள், 5 கோல்டன் குளோப் விருதுகள் உள்ளிட்ட பல விருதுகளை வென்றவர் ஹாலிவுட் நடிகர் மற்றும் தயாரிப்பாளர் மைக்கேல் டக்ளஸ். இவர் கோவாவில் நடைபெற்று வரும் 54வது சர்வதேச திரைப்பட விழாவில் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது  ’இந்த உலகப் புகழ் பெற்ற விழாவில் கலந்து கொள்வதில் தனக்கு மகிழ்ச்சி என்றும் இந்த விழாவின் தனித்துவம் மற்றும் அழகு பார்த்து ஆச்சரியப்பட்டேன் என்றும் இந்தியா சிறந்தவர்களின் கரங்களில் இருப்பதாக நினைக்கிறேன் என்றும் தெரிவித்தார்.  

அமைச்சர் அனுராக் தாக்கூர் மற்றும் பிரதமர் மோடியின் ஆட்சியில் கடந்த சில ஆண்டுகளாக திரைப்படங்களின் தயாரிப்பு மற்றும் நிதி உதவிக்கு அதிக பணம் செலவிடுவதை கேள்விப்பட்டேன் என்றும் இந்திய படங்களுக்கு இது வெற்றி பெறும் காலகட்டம் என்றும் அவர் கூறினார்  

பல்வேறு மொழிகளை பேசும் சினிமா என்ற ஒரே மொழியின் கீழ் நாம் ஒன்றிணைகிறோம் என்றும் உலகத்தில் எந்த மூலையில் நீங்கள் இருந்தாலும் மற்ற இடங்களில் என்ன நடக்கிறது என்பதை திரைப்படங்கள் மூலம் தெரிந்து கொள்ளலாம் என்றும் அவர் கூறினார்.

Edited by Mahendran