திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 26 நவம்பர் 2023 (17:26 IST)

இந்தியர்கள் வெளிநாடுகளில் திருமணம் நடத்துவதை நிறுத்த வேண்டும்: பிரதமர் மோடி

PM Modi
இந்தியர்கள் வெளிநாடுகளில் திருமணம் செய்வதை நிறுத்த வேண்டும் என பிரதமர் மோடி கோரிக்கை விடுத்துள்ளார்.

மான் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி இன்று பேசியபோது இந்தியர்கள் சிலர் தங்கள் திருமணத்தை வெளிநாடுகளில் வைத்து நடத்துகின்றனர். உள்நாட்டிலேயே திருமணம் செய்தால் தான் நம் நாட்டின் பணம் வெளியே செல்லாமல் இருக்கும் இந்திய பொருளாதாரமும் மேம்படும் என்று கூறியுள்ளார்.

மேலும் திருமணத்திற்கு பொருட்கள் வாங்கும் போது இந்தியாவில் தயாரிக்கப்படும் பொருட்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றும் இதனால் இந்திய சந்தை மதிப்பில் 5 லட்சம் கோடி வர்த்தகம் நடைபெறும் என்றும் வணிக அமைப்புகள் கணித்து உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.  

விளையாட்டு வீரர்கள் சினிமா பிரபலங்கள் உட்பட பல கோடீஸ்வரர்கள் வெளிநாடுகளில் திருமணம் செய்து வரும் நிலையில் அனைவரும் இந்தியாவில் திருமணம் செய்ய வேண்டும் என்று பிரதமர் மோடி வேண்டி வேண்டுகோள் விடுத்துள்ள நிலையில் இனிமேலாவது பிரபலங்கள் தங்கள் திருமணத்தை இந்தியாவில் நடத்துவார்களா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

Edited by Siva