திங்கள், 13 ஏப்ரல் 2026
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By BALA
Last Modified: திங்கள், 9 மார்ச் 2026 (11:49 IST)

3 வேளை சோத்துக்குதான் இதெல்லாம்!.. நடிகரிடம் புலம்பிய விஜய்!...

vijay
நாளைய தீர்ப்பு திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி துவக்கத்தில் சரியான வாய்ப்புகள் கிடைக்காமல் போராடி விக்ரமனின் இயக்கத்தில் பூவே உனக்காக படத்தில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானவர்தான் விஜய்.. தொடர்ந்து காதல் படங்களில் நடித்தும், தனது நடன திறமை மூலமாகவும் தனக்கென ஒரு பெரிய ரசிகர் கூட்டத்தை உருவாக்கினார் விஜய். ஒருகட்டத்தில் ஆக்சன் ரூட்டுக்கு மாறி மாஸ் ஹீரோவாகவும் மாறினார்.

சினிமாவில் 30 வருடங்களுக்கும் மேல் நடித்து தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக பார்க்கப்பட்டவர் விஜய். முதல் நாளிலேயே இவரின் படம் 35 கோடி வசூல் செய்யும். அதேபோல், இவரின் படங்களின் வியாபாரம் 400 கோடிகளை தாண்டும். தற்போது அரசியலுக்கும் சென்றிருக்கிறார்.

விஜயின் ரசிகர்களுக்கு அவரிடம் மிகவும் பிடித்தது அவரின்  நடன திறமைதான்.. இனிமேல் அவர்களால் அதை சினிமாவில் பார்க்க முடியாது. ஏனெனில், ஜனநாயகன் தனது கடைசிப்படம் என விஜய் ஏற்கனவே அறிவித்துவிட்டார்.

இந்நிலையில்தான், விஜயுடன் சில படங்களில் நடித்த நடிகர் யோகி பாபு ஒரு முக்கிய தகவலை பகிர்ந்து கொண்டார். நான் விஜய் அண்ணாவுடன் சர்க்கார் படத்தில் நடித்தேன். அப்போது சிம்டாங்காரன் என்கிற பாடலுக்கு விஜய் நடனமாடுவார்.. அந்த பாடலில் நானும் இருப்பேன்.  நடனமாடிவிட்டு வந்து என் தோளை பிடித்து ‘என் கால் முட்டிய பாருடா’ என்று சொன்னார்.. நானும் தொட்டுப் பார்த்தேன்.. கட கடன்னு ஆடியது.. அப்போது அவர் ‘மூன்று வேளை சோத்துக்கு எவ்வளவு பாடுபட வேண்டி இருக்கு’ என்று சொன்னார்’ என யோகி பாபு கூறியிருக்கிறார்..