திங்கள், 13 ஏப்ரல் 2026
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Updated : புதன், 11 மார்ச் 2026 (18:27 IST)

ஏப்ரல் 10 ரிலீஸ் இல்ல!.. கருப்பு படம் தொடர்பாக ஆர்.ஜே.பாலாஜி போட்ட வீடியோ!...

Karuppu Teaser
ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா, திரிஷா உள்ளிட்ட பலரும் நடித்து உருவாகியிருக்கும் திரைப்படம் கருப்பு.. இந்த படத்தின் வேலைகள் பல மாதங்களுக்கு முன்பே துவங்கியது..
ஆனால் சில காரணங்களால் படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதாக செய்திகள் வெளியானது..

இந்த படம் முடிவதற்கு முன்பே வெங்கி அட்லூரி இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடிக்கப் போனார் சூர்யா. அதன்பின் சூர்யாவின் கால்ஷீட்டை வாங்கி மீதி 20 நாட்கள் படப்பிடிப்பையும் நடத்தி படத்தை முடித்து விட்டார் ஆர்.ஜே பாலாஜி. ஆனால் படம் எப்போது ரிலீஸ் என இதுவரை அறிவிப்பு வெளியாகவில்லை. கருப்பு படம் எப்போது ரிலீஸ் என சூர்ய ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்..

ஓடிடி உரிமை விற்கப்படவில்லை என்பதால் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படவில்லை என முதலில் சொல்லப்பட்டது.. அதன்பின்  ஓடிடி விற்பனையானாலும் ரிலீஸ் தேதியை சொல்லாமல் இருக்கிறார்கள்.. இந்நிலையில்தான் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ வந்து வெளியிட்ட ஆர் ஜே பாலாஜி ‘கருப்பு பணம் தொடர்பாக சூர்யா ரசிகர்கள் கோபமாக இருக்கிறார்கள் என்பது எனக்கு தெரியும்.. நானும் இரண்டு வருடங்களாக இதைதான் செய்து கொண்டிருக்கிறேன்.. இன்னும் ஒரு வாரத்தில் இந்த படம் பற்றிய முக்கிய அறிவிப்பு வெளியாகும். ஆனால் கண்டிப்பாக ஏப்ரல் 10ம் தேதி படம் ரிலீஸ் இல்லை’ என சொல்லியிருக்கிறார்.


 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by RJ Balaji (@irjbalaji)