திங்கள், 13 ஏப்ரல் 2026
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Modified: ஞாயிறு, 8 மார்ச் 2026 (14:55 IST)

இப்ப அந்த காரை யார் வச்சிருக்கா? விஜய் - த்ரிஷா குறித்த கேள்விக்கு நடிகர் விமல் பதில்..!

இப்ப அந்த காரை யார் வச்சிருக்கா? விஜய் - த்ரிஷா குறித்த கேள்விக்கு நடிகர் விமல் பதில்..!
சமூக வலைதளங்களில் சமீபகாலமாக நடிகர் விஜய் மற்றும் நடிகை த்ரிஷா குறித்து பல்வேறு கிசுகிசுக்கள் பரவி வருகின்றன. குறிப்பாக, 'லியோ' படத்தில் இருவரும் இணைந்து நடித்த பிறகு, இவர்கள் குறித்த செய்திகள் வைரலாகின. 
 
இந்த நிலையில் சமீபத்தில் ஒரு நேர்காணலில் பங்கேற்ற நடிகர் விமலிடம், விஜய் - த்ரிஷா விவகாரம் குறித்துக் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த விமல், ’இப்ப அந்த காரை யார் வச்சிருக்கா? ஏங்க என்கிட்ட இதுமாதிரி கேள்வி எல்லாம் கேட்கிறீர்கள்.. யார் யார் யாரை வச்சிருக்கான்னு லிஸ்ட் எடுக்குறதா என் வேலை’ என்று  நகைச்சுவையாகவும் யதார்த்தமாகவும் பதிலளித்தார்.
 
நடிகர் விஜய்யின் அரசியல் வருகை மற்றும் அவரது 'தமிழக வெற்றிக் கழகம்' குறித்த எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ள நிலையில், சினிமா தொடர்பான இத்தகைய கேள்விகள் விமல் மட்டுமின்றி பல நடிகர்களிடம் தொடர்ந்து கேட்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva