1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 2 ஜூலை 2018 (15:08 IST)

விரைவில் 5ஜி: அமெரிக்க நிறுவனத்தை கைப்பற்றும் ஜியோ!

அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு இயங்கும் ராடிசிஸ் கார்ப்பரேஷன் டெலிகாம் சேவை மற்றும் உதிரிபாகங்களை தயாரித்து வழங்கும் நிறுவனத்தை ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் கைப்பற்ற இருக்கிறது. 
 
இந்த நிறுவனத்தை கைப்பற்றுவதன் மூலம் ஜியோ தனது வாடிக்கையாளர்களுக்கு 5ஜி மற்றும் இன்டர்நெட் ஆஃப் திங்ஸ் சேவைகளை வழங்க முடிவு செய்துள்ளதாம். 
 
இதற்காக ரிலையன்ஸ் நிறுவனம் பங்கு ஒன்றுக்கு 1.72 டாலர்கள் வீதம் கட்டணமாக செலுத்த இருக்கிறது. இதில் மேலும் உள்ள சிறப்பம்சம் என்னவெனில், இந்த நிறுவனத்தை கைப்பற்றுவதால் ஜியோ டெலிகாம் மட்டுமின்றி தொழில்நுட்ப நிறுவனமாகவும் உருவெடுக்கும்.
 
ரிலையன்ஸ் மற்றும் ராடிசிஸ் நிறுவனங்களிடையேயான ஒப்பந்தம் 2018 நான்காம் காலாண்டு வாக்கில் நிறைவுற இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.