ரிலையன்ஸ் ஜியோ - ஏர்டெல்: உலக கோப்பைக்காக போட்டா போட்டி!

Last Updated: வியாழன், 14 ஜூன் 2018 (13:33 IST)
ரஷ்யாவில் நடக்க இருக்கும் 21வது உலக கோப்பை கால்பந்து போட்டிகள் இன்று முதல் துவங்குகிறது. இது கால்பந்து ரசிகர்கள் மத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
இந்த எதிர்பார்ப்புகளை மேலும் அதிகரிக்க ஜியோ மற்றும் ஏர்டெல் உலக கோப்பை கால்பந்து போட்டிகளை இலவசமாக நேரலையில் ஸ்ட்ரீம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளன.
 
அதவது ஜியோ மற்றும் ஏர்டெல் வாடிக்கையாளர்கள் போட்டிகளை இலவசமாக கண்டு கழிக்கலாம். அதோடு, இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் டெஸ்ட் கிரிக்கெட் தொடரையும் காணலாம். 
 
ஏர்டெல் டிவி செயலியில் கால்பந்து போட்டிகளை வெவ்வேறு உள்ளூர் மொழிகளில் பார்த்து ரசிக்க முடியும். போட்டி மட்டுமின்றி, இதர சுவாரஸ்ய வீடியோக்களையும் காண முடியும். இதற்கு பயனர்கள் ஏர்டெல் டிவி ஆப்பை அப்டேட் செய்ய வேண்டும்.
 
ஜியோ டிவியும் தன் பங்கிற்கு பிரீமியம் ஸ்போர்ட் தரவுகளை இலவசமாக பார்த்து ரசிக்கும் வசதியை வழங்கியுள்ளது. ஜியோ டிவி செயலியை 10 கோடியை கடந்த வாடிக்கையாளர்களும் ஏர்டெல் டிவி செயலியை சுமார் 5 கோடி வாடிக்கையாளர்கலும் பயன்படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


இதில் மேலும் படிக்கவும் :