திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 12 ஜூன் 2018 (21:43 IST)

தினமும் 3ஜிபி டேட்டா இலவசம்: ஜியோவின் அதிரடியால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் மொபைல்போனில் இண்டர்நெட் பயன்படுத்தினால் அதற்கென்று ஒரு பெரிய தொகை செலவு செய்ய வேண்டிய நிலை இருந்தது. ஆனால் தற்போது ஜியோ அறிமுகமான பின்னர் மிகக்குறைந்த விலையில் அதிக டேட்டா கிடைத்து வருகிறது
 
இதன்படி ஜியோ தனது வாடிக்கையாளர்களுக்கு முதலில் தினமும் 1ஜிபி டேட்டா வழங்கி வந்த நிலையில் பின்னர் அதனை 1.5ஜிபி என மாற்றியது. இந்த நிலையில் தற்போது தினமும் 3ஜிபி டேட்டா என இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது.
 
இதன்படி ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்கள் ரூ.149, ரூ.349, ரூ.399, ரூ.449 ஆகிய தொகைகளுக்கு ரீசார்ஜ் செய்தால், தினமும் 1.5ஜிபி (4ஜி)டேட்டாவோடு கூடுதலாக 1.5ஜிபி டேட்டா என மொத்தம் 3ஜிபி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு ஜியோ வாடிக்கையாளர்களுக்கு இரட்டை மகிழ்ச்சியை அளித்துள்ளது. ஆனால் அதே நேரத்தில் ஜியோவுக்கு போட்டியாக செயல்பட்டு வரும் மற்ற தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் இந்த சலுகை அறிவிப்பால் அதிர்ச்சி அடைந்துள்ளன.