திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 21 ஜூன் 2018 (15:13 IST)

ரூ.299-க்கு 4.5 ஜிபி: ஜியோவின் லிமிட்டெட் ஆஃபர்!

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் சமீபத்தில் தனது வாடிக்கையாளர்களுக்கு டபுள் தமாக்கா ஆஃபரை அறிவித்தது. தற்போது இந்த சலுகையில் மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. 
 
முன்னதாக ரூ.299 சலுகையில் பயனர்களுக்கு தினமும் 3 ஜிபி டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், 100 எஸ்எம்எஸ், ஜியோ செயலிகளை பயன்படுத்தும் வசதி உள்ளிட்டவை வழங்கப்பட்டது. 
 
தற்சமயம் இந்த சலுகையில் பயனர்கள் தினமும் 4.5 ஜிபி டேட்டா மற்றும் இதர சலுகைகளை 28 நாட்களுக்கு பயன்படுத்த முடியும். இந்த் சலுகையை பெற ஜூன் 30 ஆம் தேதிக்குள் ரீசார்ஜ் செய்ய வேண்டும். 
 
மேலும், ரூ.149, ரூ.249, ரூ.399 மற்றும் ரூ.449 பிரீபெயிட் சலுகைகளில் பயனர்களுக்கு தினமும் 3 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. வேலிடிட்டியில் மாற்றமில்லை. 
 
அதேபோல், ரூ.198, ரூ.398, ரூ.448 மற்றும் ரூ.498 சலுகைகளில் தினமும் 3.5 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. ரூ.799 சலுகையில் பயனர்களுக்கு தினமும் 5.5 ஜிபி மற்றும் 6.5 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது.