ரூ.5,000 தள்ளுபடி + கேஷ்பேக்: அமேசான் 1+ ஆஃபர்!

Last Updated: வெள்ளி, 5 அக்டோபர் 2018 (12:56 IST)
ஒன் பிளஸ் ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனம் அமேசானின் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனையில் தனது ஸ்மார்ட்போன் மீது சலுகைகளை அறிவித்துள்ளது. 
 
ஒன்பிளஸ் நிறுவனத்தின் ஸ்மார்ட்போன் மீது ரூ.5,000 தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. ஆன்லைன் வர்த்தக மையமான அமேசானில் வரும் 10 ஆம் தேதி முதல் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனை துவங்குகிறது. இந்த விற்பனையில் ஒன் பிளஸ் இணைந்து சலுகைகளை வழங்கியுள்ளது.  
 
ரூ.5000 தள்ளுபடியோடு சேர்த்து தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை கொண்டு பணம் செலுத்தும் போது பிரத்யேக தள்ளுபடியும், கேஷ்பேக் சலுகைகளும் வழங்கப்படுகின்றன.  
 
ஒன்பிளஸ் 6 சிறப்பம்சங்கள்:
 
# 6.28 இன்ச் 2280x1080 பிக்சல் ஃபுல் ஹெச்டி பிளஸ் 19:9 ரக AMOLED டிஸ்ப்ளே
# கார்னிங் கொரில்லா கிளாஸ் 5, 2.8 ஜிகாஹர்ட்ஸ் ஆக்டாகோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட்
# 8 ஜிபி ராம், 128 ஜிபி இன்டெர்னல் மெமரி, டூயல் சிம் ஸ்லாட்
# 16 எம்பி + 20 எம்பி பிரைமரி கேமரா, 16 எம்பி செல்ஃபி கேமரா
# கைரேகை சென்சார், வாட்டர் ரெசிஸ்டண்ட்
# 3300 எம்ஏஹெச் பேட்டரி மற்றும் டேஷ் சார்ஜ்
# ஒன்பிளஸ் 6 ஸ்மார்ட்போன் மிரர் பிளாக், மிட்நைட் பிளாக், சில்க் வைட் மற்றும் ஆம்பர் ரெட் ஆகிய நிறங்களில் கிடைக்கிறது. 


இதில் மேலும் படிக்கவும் :