1 மணி நேரம் வேலை பார்த்தால் 1100 ரூபாய் சம்பளம்: எங்கு தெரியுமா?

Last Modified வியாழன், 4 அக்டோபர் 2018 (15:16 IST)
1 மணி நேரம் வேலை பார்த்தால் ரூ.1,100 சம்பாதிக்களாம். இது எங்கு தெரியுமா அமேசானில்தான். அமெரிக்காவை மையமாக கொண்டு இயங்கும் அமேசான் நிறுவனம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 
 
ஆம், அதாவது அமேசான் நிறுவனம் தங்களது ஊழியர்களின் ஒரு நாளுக்கான குறைந்தபட்சம் ஊதியத்தௌ நவம்பர் மாதம் முதம் 15 டாலர்களாக உயர்த்தியுள்ளது. 
 
அமேசான் அமெரிக்க ஊழியர்களுக்கு இனி 1 மணி நேரம் வேலை பார்த்தால் இந்திய ரூபாயின் மதிப்பின்படி ரூ.1,100 சம்பளமாக வழங்கப்படும். இந்த சம்பள உயர்வு நவம்பர் 1 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வருமாம். 
 
அமேசான் எடுத்துள்ள இந்த முடிவினால் 3,50,000 ஊழியர்கள் பயனடைய உள்ளார்கள். ஆனால், அமேசான் நிறுவனம் தனது போட்டி நிறுவனங்களான வால்மார்ட் மற்றும் டார்கெட் கார்ப் நிறுவனங்களை விட 3 டாலர் அதிக ஊதியத்தினை அளிக்கவே இவ்வாறு செய்துள்ளது என கூறப்படுகிறது. 
 
முழு நேரம், பகுதி நேரம், தற்காலிக பணி மற்றும் சீசனல் ஊழியர்கள் என அனைவருக்கும் இந்த ஊதிய உயர்வு வழங்கபப்டும் என அமேசான் தெரிவித்துள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :