1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
  4. Facebook new update on Messenger app

பூமராங் வீடியோ, செல்பி மோட்: கலக்கல் மெசஞ்சர் அப்டேட்

பேஸ்புக்
பேஸ்புக் நிறுவனத்தின் செயலியான மெசஞ்சரில் தர்போது புது அப்டேட்டுகள் வழங்கப்பட்டுள்ளது. இந்த அப்டேட்டுகள் குறித்த முழு விவரம் பின்வருமாறு, 
 
பேஸ்புக் தனது மெசஞ்சர் செயலியில் புதிய அப்டேட்களை வழங்கி உள்ளது. ஏற்கனவே நார்மல், வீடியோ, டெக்ஸ்ட் உள்ளிட்ட கேமரா மோட்கள் வழங்கப்பட்டு இருந்தது. 
 
தற்போது பூமராங் வீடியோக்கள், செல்பிக்களில் பேக்கிரவுண்டை தானாக பிளர் செய்யும் புதிய செல்ஃபி மோட், புகைப்படம் மற்றும் வீடியோக்களில் மெசஞ்சர் ஸ்டிக்கர்களை சேர்க்க ஆக்மென்ட்டெட் ரியாலிட்டி வசதி உள்ளிட்டவையை வழங்கியுள்ளது. 
 
மெசஞ்சரின் புதிய வடிவமைப்பு பெற்ற செயலி மற்றும் பழைய பதிப்புகளில் அப்டேட் செய்வோருக்கு புதிய வசதிகள் வழங்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. 
அடுத்த கட்டுரையில்
நள்ளிரவு முதல் ஜனாதிபதி ஆட்சி: அரசியலில் திடீர் பரபரப்பு!