பணியாளருக்கு சம்பளத்தை வழங்குவதற்காக பணியமர்த்துபவரால் பராமரிக்கப்படும் வங்கி கணக்கே சம்பள கணக்கு எனப்படுகிறது. இது பொதுவாக ஜீரோ பாலன்ஸ் கணக்கு என்றும் அழைக்கப்படுகிறது. பணியாளரின் வங்கி சம்பள கணக்கிற்கு மாதாந்திர அடிப்படையில் சம்பளம் போடப்படும். மூன்று மாதங்களுக்கும் மேலாக தொடர்ந்து பணியாளர்களின் வங்கிக் கணக்கில் சம்பளம் வரவு வைக்கப்படாவிட்டால், சம்பள கணக்கானது சேமிப்பு வங்கி கணக்காக கருதப்படும். ஆனால், உங்களது சம்பள கணக்கை சேமிப்பு கணக்காக மாற்ற...