1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Two children struk in sand and passed away

சேற்றில் சிக்கி இரு குழந்தைகள் மரணம் - கிருஷ்ணகிரி அருகே சோகம்

Krishnagiri
கிருஷ்ணகிரி கே.ஆர்.பி அணையின் சேற்றில் சிக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த இரண்டு குழந்தைகள் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

 
கிருஷ்ணகிரி மாவட்டம் கே.ஆர்.பி அணை அருகே சின்னபேயனபள்ளி கிராமத்தை சேர்ந்தவர் நரசிம்மன். இவருக்கு எட்டு வயதில் தமிழ்செல்வன் என்ற மகனும் 3 வயதில் நந்தினி என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில் நரசிம்மன் இன்று காலை கே.ஆர்.அணை பகுதியில் உள்ள தனது மல்லிகை தோட்டத்தில் பூ பரித்து கொண்டு இருந்தார். அப்பொழுது அவர் வளர்த்து ஆடு அணையில் தண்ணீர் அருந்த சென்றுள்ளது. நரசிம்மன் தனது மகன் மற்றும் மகளை  அனுப்பி ஆட்டை பிடித்து வருமாறு கூறியுள்ளார்.
 
அப்பொழுது ஆட்டை பிடிக்க சென்ற தமிழ்செல்வன் மற்றும் நந்தினி கே.ஆர்.பி அணையில் தவறி விழுந்தனர். தவறி விழுந்த இருவரும் சேற்றில் சிக்கி உயிருக்கு போராடிய நிலையில் குழந்தைகள் அலறல் சத்தம் கேட்டு நரசிம்மன் காப்பாற்ற சென்றுள்ளார். அதற்குள் குழந்தைகள் இருவரும் மூச்சு திணறி பலியாகினர்.
 
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று குழந்தைகள் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
 
அண்ணன், தங்கை என இரு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
 
-சி. ஆனந்தகுமார்
அடுத்த கட்டுரையில்
சம்பள கணக்கை சேமிப்பு கணக்காக மாற்ற வேண்டுமா?