1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 31 ஜூலை 2018 (14:13 IST)

ரூ.399க்கு 3.5 ஜிபி டேட்டா: ஆஃபரை நீடித்த ஜியோ!

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ஏற்கனவே தனது வாடிக்கையாளர்களுக்கு குறைந்த விலையில் பல சலுகைகளுடன் ரீசார்ஜ் கட்டணங்களை நிர்ணயித்துள்ளது.
 
அதன்படி பயனர்கள் ஏற்கனவே பயன்படுத்தும் சலுகையுடன் 2 ஜிபி வரை கூடுதல் டேட்டா வழங்கப்பட்டும் என அறிவித்துள்ளது. மைஜியோ செயலியில் காணப்படும் இந்த சலுகை, தேர்வு செய்யப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு மட்டும் வழங்கப்படுகிறது.
 
அதாவது, ரூ.399 பிரீபெயிட் சலுகையை பயன்படுத்தும் வாடிக்கையாளராக இருந்தால், 84 நாட்களுக்கு தினமும்  வழங்கப்படும் 1.5 ஜிபியோடு 2 ஜிபி கூடுதல் டேட்டா இலவசமாக வழங்கப்படும். 
 
எனினும் இந்த சலுகை ஜூலை 31 வரை வழங்கப்பட்டதால், பெரும்பாலும் பயனற்றதாகவே இருந்தது. எனவே, இந்த சலுகை சில பயனர்களுக்கு ஆகஸ்டு 2 ஆம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாம்.