டாம் குரூசுடன் திருமணமா? வனஷே கிர்பி விளக்கம்

tom cruise
Last Modified திங்கள், 30 ஜூலை 2018 (19:27 IST)
பிரபல பாலிவுட் நடிகர் டாம் க்ரூஸை திருமணம் செய்து கொள்ளப்போவதாக வரும் தகவல்கள் மிக அபத்தமானவை என வனஷே கிர்பி மறுத்துள்ளார்.பிரபல ஹாலிவுட் நடிகர் டாக் க்ரூஸ். இவரும் 'க்ரேட் எக்ஸ்பெக்டேன்' படத்தில் நடித்த வனஷே கிர்பியும் 'மிஷன் இம்பாசிபில்' படத்தில் ஜோடியாக நடித்துள்ளனர். இந்த படம் கடந்த வெள்ளிக்கிழமை இந்தியாவில் ஆங்கிலம், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் வெளியாகியுள்ளது. இது மட்டுமின்றி உலகம் முழுவதும் பல்வேறு மொழிகளில் வெளியாகி வசூலில் சக்கை போடு போட்டு வருகிறது. இந்நிலையில், மிஷன் இம்பாசிபில் பட சூட்டிங் தொடங்கியது முதலே டாம் குரூஸ் மற்றும் வனஷே கிர்பி இருவரும் காதலிப்பதாகவும், ஜோடியாக சுற்றுவதாகவும், விரைவில் திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும் தகவல்கள் பரவின.

இதனை திட்டவட்டமாக மறுத்துள்ளார் வனஷே கிர்பி, இது தொடர்பாக அவர் கூறுகையில், "நானும் டாக் க்ருசும் திருமணம் செய்வது குறித்து பேசவில்லை. யார்? யாரோ- ... காதல் , திருமணம் என கண்டபடி எழுதுகிறார்கள். ஆனால் அவை எதுவும் உண்மையில்லை. இந்த செய்திகள் அனைத்தும் அப்படியே தூக்கி எறிய வேண்டிய அபத்தமானவை. நான் மட்டுமல்ல க்ருசும் இந்த விஷயங்களை அப்படியே ஒதுக்கி தள்ளிவிடுவார். நாங்கள் இருவரும் சினிமாவில் இனியும் சேர்ந்து நடிப்போம். எங்கள் வேலை அது தான் அதைத்தான் செய்வோம்'' என்றார்.


இதில் மேலும் படிக்கவும் :