1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : திங்கள், 30 ஜூலை 2018 (20:15 IST)

டீக்கும் பாத்ரூமுக்கும் சண்டை போடும் குருப்: யாரை கூறுகிறார் கஸ்தூரி?

நடிகை கஸ்தூரி அவ்வப்போது டிவிட்டரில் காரசாரமான கருத்துக்களை தெரிவித்து வருபவர். சமீபத்தில் கூட அவர் தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி விஷயத்தை பற்றியும் கூட சமீபத்தில் பேசியிருந்தார். 
இந்நிலையில், தற்போது அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியை மறைமுகமாக தாக்கி பேசியுள்ளார். அதாவது கடந்த சில தினங்களாக திமுக தலைவர் கருணாநிதி உடல் நிலை குறைவால் மருத்துவமனையில் அனுமதிப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். 
 
ஆனால், பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் இரண்டு அணிகளாக பிரிக்கப்பட்டு வீட்டிற்குள் இருக்கும் இடங்களை கப்பற்றுவதற்கு சண்டையிட்டு வந்தனர். 
 
இதனால் கஸ்தூரி, இங்க என்ன நடக்குதுன்னே தெரியாம அங்க ஒரு குரூப், டீக்கும் பாத்ரூமுக்கும் அடிச்சிகிட்டு இருப்பாங்க. அதுவும் ஒரு எபிசோடு ஆகும் என ட்வீட் செய்துள்ளார்.