திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : ஞாயிறு, 29 ஜூலை 2018 (20:45 IST)

சரணடைந்த மாவோயிஸ்ட் தம்பதியினருக்கு ரூ.5 லட்சம் பரிசு!

ஒடிசா மாநிலம் மால்கங்கிரி மாவட்டத்தில் உள்ள மாவோயிஸ்ட் இயக்கத்தை சேர்ந்த முகேஷ், ரத்னா தம்பதியினர் ரூ.5 லட்சம் பரிசுத் தொகை பெற்றுள்ளனர்.

 
ஒடிசா மாநிலம் மால்கங்கிரி மாவட்டம் மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் நிறைந்த பகுதியாகும். மாவோயிஸ்ட் இயக்கத்தை சேர்ந்த முகேஷ், ரத்னா என்ற தம்பதியினர் மீது 40க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. 
 
இந்த தம்பதியினர் சரணடைந்தால் ரூ.5 லட்சம் பரிசு என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் அந்த மாவோயிஸ்ட் தம்பதியினர் போலீஸாரிடம் சரண் அடைந்தனர். இதனை மால்கங்கிரி எஸ்.பி மீனா தெரிவித்துள்ளார்.
 
மேலும், அறிவித்தப்படி பரிசுத் தொகையாக ரூ.5 லட்சம் தம்பதியினருக்கு போலீஸார் வழங்கினார்.