திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. நாடும் நடப்பும்
Written By Sinoj
Last Updated : வெள்ளி, 5 பிப்ரவரி 2021 (17:15 IST)

வரதட்சனை குற்றத்திற்கு 10 ஆண்டுகள் சிறை – மசோதா நிறைவேற்றம்

தமிழகத்தில் கடந்த 2 ஆம் தேதி ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையுடன் தொடங்கிய தமிழக சட்டசபை இன்று ஆளுநரால் தேதி குறிப்பிடாமல்  ஒத்திவைக்கப்பட்டது.
 
இன்று சட்டசபையில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டிற்கு தடை செய்யும் மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
 
அதேபோல் பெண்கள்,குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோருக்குத் தண்டனை அதிகரிக்கும் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.
 
அதேபோல், பிரிவு 304 ல் பெண்களுக்கு எதிரான வரதட்சனை தொடர்பான குற்றத்திற்கான தண்டனையை 7 –ல் இருந்து 10 ஆண்டுகளாக மாற்ற வழி  செய்யப்பட்டுள்ளது.